ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER
J.ELANGOVAN..WEB DESIGNER

Friday, September 6, 2013

ஸ்ரீரங்கத்தில் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஸ்ரீரங்கத்தில் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 100 நிறுவனங்கள் பங்கேற்பு 9 ஆயிரம் பேரை தேர்வு செய்ய முடிவு.

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் வரும் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் தொழி லாளர் நலத்துறை மற்றும் தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 8ம் தேதி காலை 9.30 மணியளவில் முகாம் துவங்குகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்று, சுமார் 9 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளனர். 
முகாமில் 8ம்வகுப்பு முதல் பி.இ. வரை படித்த அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும், வேலை தேடி வரும் மனுதாரர்களுக்கும் எவ்வித கட்டணமும் இல்லை. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த மற்ற மாவட்டத்தினரும் கலந்து கொள்ளலாம். 
இந்நிலையில் முகாம் நடக்கும் பள்ளி வளாகத்தை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், கதர் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மை செய லாளர் மோகன் பியாரே, தொழிலாளர் நல ஆணை யர் சந்திரமோகன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் பிரகாஷ், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ ஆகியோர் பார்வையிட்டனர். மேயர் ஜெயா, எம்எல்ஏக்கள் சிவபதி, சந்திரசேகர், இந்திராகாந்தி, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், தொழி லாளர் நல துணை ஆணை யர் மகாராஜன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் அழகேசன், வேலைவாய்ப்பு அலுவலக மண்டல துணை இயக்குனர்  முரளிதரன் ஆகி யோர் உடனிருந்தனர்.

பதிவு ரத்து ஆகாது

வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து ரத்து செய்யப்பட மாட்டாது. அவர்கள் தொடர்ந்து பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். சிறப்பு முகாமுக்கு வருகை தரும் இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ், தேவையான நகல்கள் மற்றும் தன் விபர குறிப்பு படிவங்களுடன் வர வேண்டும்.Google+ Followers

Followers

word

DEAR AUDIENCE PLZ OPEN THE WEBSIDE ONLY GOOGLE>>>>>> <<<<<<>>>>>>>PLZ AVOID INTERNET EXPLORER