ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER
J.ELANGOVAN..WEB DESIGNER

Wednesday, January 9, 2013

வங்கிகளில் 1,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு


வங்கிகளில் 1,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு – காணொளி
பதிவு செய்த நாள் -
ஜனவரி 07, 2013  at   7:42:08 PM
 
வங்கிகளில் சுமார் 1,00,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், அதாவது, வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தவிர, அந்த வங்கியில் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். மற்ற பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20,000 எழுத்தர் பணியிடங்களுக்கு ஊழியர் தேர்வு நடைபெற உள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் கூடுதலாக 22,000 அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள நிலையில், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன.
எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 50,000 பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,00,000 பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Google+ Followers

Followers

word

DEAR AUDIENCE PLZ OPEN THE WEBSIDE ONLY GOOGLE>>>>>> <<<<<<>>>>>>>PLZ AVOID INTERNET EXPLORER